Opening Hour: Mon - Sun : 6:15 AM - 12:30 PM & 4:00 PM - 6:00 PM
periyandavarsadachiamman@gmail.com
76670 07425, 94430 88833
நமது குலதெய்வம் அருள்மிகு பெரியாண்டவர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிக்களரி திருவிழாவில் தலைக்கட்டு வரி தொகையினை செலுத்துவது நம் தயாதிகள் அனைவரின் தலையாய குடும்ப கடமையாகும்.
அதனால் நம் தயாதிகள் திருமணம் ஆன குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியே அவர்களுடைய பெயரில் தலைக்கட்டு வரி
செலுத்த வேண்டுகிறோம். தாங்கள் வழங்கும் தலைக்கட்டு வரி கோயில் வளர்சிக்குப் பேருதவியாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.
தங்கள் வசமுள்ள உண்டியலை மனமுவந்து நிறைவு செய்து களரித் திருநாளில் கோயிலில் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
மேலும் புதிய உண்டியல் தேவைக்கு கோயிலில் பெற்றுக் கொ ள்ள வேண்டுகிறோம்.
மாசிக்களரித் திருவிழாவில் அபிசேகப் பொருட்களான பால், தயிர், நெய், தேன், பன்னீர், சந்தனம், கற்கண்டு, சக்கரை, பழவகைகள், வாழை, பலா, ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, ஆப்பிள், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ மற்றும் வாசனைப் பொருட்கள்.
பூச்சொறிதல் விழாவிற்கு எல்லா வகையான உதிரிப்பூக்கள் உபயமாக முன்கூட்டியே கொடுக்கலாம் அனைவரது பூஜை பொருட்களும் பெற்றுக்கொண்டு அருள்மிகு பெரியாண்டவர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெரும். இதை கண்டு மகிழ்ந்து சுவாமியின் திருவருளை பெற்றுச்செல்ல அன்போடு வேண்டுகிறோம்.