Opening Hour: Mon - Sun : 6:15 AM - 12:30 PM & 4:00 PM - 6:00 PM

periyandavarsadachiamman@gmail.com

76670 07425, 94430 88833

பெரியாண்டவர் சுவாமி கோவில்

கும்பாபிஷேகம்

அருள்மிகு பெரியாண்டவர் சுவாமி திருக்கோயில் 4வது மஹா கும்பாபிஷேகம் அதிவிமர்சையாக வருகின்ற வைகாசி மாதம் 6ம்நாள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிவிமர்சையாக நடைபெற உள்ளது

களரி முடிந்து பங்குனி மாதம் 7ம் தேதி 20-03-2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அன்றைய நாள்முதல் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டலபூஜை வைகாசி மாதம் 24ம்தேதி 06-06-2024 வியாழக்கிழமை காலை 10.00 மணி முடியும் வரை கோயிலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் முக்கிய தகவல்களும் பின்வருமாறு

1. மாசிக்களரித்திருவிழா அன்று கும்பாபிஷேகத்திற்கு காப்பு கட்ட விரும்புபவர்கள் கோயில் நிர்வாகிகளிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளவும்.

2. காப்பு கட்ட விருப்பம் உள்ளவர்கள் தம்பதி சகிதமாக 21 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

3. 29-04-2024 திங்கள்கிழமை காலை 09.00 - 10.30 மணிக்குள் பந்தக்கால் நட்டு, காப்பு கட்டப்படும்.

4. காப்பு கட்டி விரதம் இருக்கும் தம்பதிகளுக்கு கும்பாபிஷேகத்தன்று பரிவட்டம் கட்டப்படும்.

5. கும்பாபிஷேகத்திற்கு உணவு நன்கொடையாக ரூபாய் 20,000/-க்கு மேல் வழங்குபவர்களின் பெயர் பத்திரிக்கையில் அச்சிட்டு கும்பாபிஷேகத்தன்று பரிவட்டம் கட்டி கவுரவிக்கப்படுவார்கள்.

6. கும்பாபிஷேக யாகசாலை பொருட்கள் கொடுக்க விருப்பம் உள்ள உபயதாரர்கள் பணமாக கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

7. 17-05-2024 காலை முதல் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை வரை திருக்கோவிலிருந்து உணவு வழங்கப்படும். 19-05-2024 அன்று மதியம் அன்னதானம் நடைபெறும்.

8. கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை ரசீது பெற்றுக்கொண்டவர்கள் களரித்திருவிழா அன்று பணம் கொடுக்கும்படியும், ரசீது பெறாதவர்கள் நன்கொடை கொடுத்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உதவும் படியும் கேட்டுக்கொள்கிறோம்.

பாலாலயம் தேதி முதல் கும்பாபிஷேகம் முடிந்து 48நாட்கள் மண்டல பூஜைகள் முடியும் வரை நமது குல தெய்வத்திற்கு பொங்கல் வைப்பது, பத்திரிக்கை வைத்து பூஜை செய்வது, மற்றும் சைவ உணவுகள் மட்டும் கோயிலில் சமைத்து கொள்ளலாம்.

* முடிகாணிக்கை, காதுகுத்துதல், அசைவம் சமைப்பது அறவே கூடாது.